கோவை ஒப்பணக்கார வீதியில் கரூர் வைசியா வங்கி உள்ளது. இங்குள்ள ஏ.டி.எம் .எந்திரத்தில் இருந்த மோடத்தை இரவில் யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அந்தக் கிளையின் மானேஜர் சியாம் சுந்தர் ,கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் .சப்- இன்ஸ்பெக்டர் கோமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி .கேமரா மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.