மனைவியை கட்டாயபடுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்து நண்பர்களுடன் சேர்ந்து மானபங்கம் செய்த கணவர் மீது வழக்கு..!

கோவை : குனியமுத்தூர் சிறுவாணி டாங்க் ரோட்டில் உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜிவ். இவரது மனைவி சுமதி ( வயது 40)இவர் ஏற்கனவே திருமணம். ஆனவர்.ஒரு மகன் உள்ளார் கடந்த 6 ஆண்டுகளாக கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார்”.இந்த நிலையில் குனியமுத்தூர் இடையர்பாளையத்தைச் சேர்ந்த ராஜிவுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் சுமதியை 2-வது திருமணம் செய்து கொண்டார்.ராஜிவ் ஏற்கனவே திருமணம் ஆனவர்.முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் சுமதியை 2-வது திருமணம் செய்து கொண்டார். 3 தடவை சுமதியை கருக்கலைப்பு செய்ய வைத்தார். மேலும் தனது தங்கையின்  மகள் திருமண செலவுக்காக சுமதியிடம் ரூ 2 லட்சம் வாங்கினாராம். அதை சுமதி கேட்டபோது தனது நண்பருடன் சேர்ந்து சுமதியை தாக்கி மானபங்கம் செய்தாராம்.இது குறித்து சுமதி கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் கணவர் ராஜிவ், அவரது நண்பர்கள் ராதாகிருஷ்ணன், ரமேஷ் ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை மான பங்கம் ,பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.