இரவல் பைக் வாங்கி எஸ்கேப் ஆன மோசடி கும்பல் மீது வழக்கு..!

கோவை: திருப்பூர் பக்கம் உள்ள வஞ்சியாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் ( வயது 40 )பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் அருகே பைக்குடன் நின்று கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த ஒருவர் அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று பைக்கை இரவல் கேட்டார் . இதை நம்பி பைக்கை கொடுத்தார். பின்னர் அந்த ஆசாமி பைக்குடன் எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து பாலமுருகன் காட்டூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் மகேஷ் குமார், லோகநாதன் ,சதீஷ்குமார் பைசல் ,ஆகிய 4பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.