கோவை : உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நிதின்குமார் .இவரது மனைவி குஷ்பூ உபாத்யாய் (வயது 32) இவர் வட கோவையில் தமிழ்நாடு வனத்துறை அகாடமியில் 18 மாத பயிற்சிக்காக வந்திருந்தார் .அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார். நேற்று இவர் ஆர் .எஸ். புரம் டி.பி ரோட்டில் ” வாக்கிங்” சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டியில் ஹெல்மெட் அணிந்து பின்னால் இருந்து வந்த ஒரு ஆசாமி திடீரென்று இவரது முதுகின் பின்பகுதியை தட்டினார்.அந்த ஆசாமியை குஷ்பூ உபாத்தியாய் பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் அந்த ஆசாமி ஸ்கூட்டியில் தப்பி ஓடிவிட்டார்.இதுகுறித்து ஆர் .எஸ் .புரம் .போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி”மான பங்க வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஆசாமியை தேடி வருகிறார்..
Leave a Reply