மாங்கல்ய பூஜை செய்வதாக கூறி சென்னை தொழில் அதிபரிடம் 15 பவுன் தாலி சங்கிலி, 25 ஆயிரம் பணம் மோசடி-கோவை ஜோதிடர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு..!!

கோவை ஜோதிடர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு.

கோவை : சென்னை பழைய வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் கருப்பையா ( வயது 45 )தொழிலதிபர். டிராவல்ஸ் நிறுவனம் நடத்துகிறார். இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடம் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ளது. அந்த இடம் பிரச்சினையில் இருந்தது. இந்த நிலையில் கருப்பையாவுக்கு கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த ஜோதிடரும் இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணைத் தலைவருமான பிரசன்னா ( வயது 41) என்பவர் அறிமுகமானார். அவர் இடம் சம்பந்தபட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து தருவதாக கருப்பையாவிடம் கூறினார் .அதை நம்பிய கருப்பையா பிரசன்னாவிடம் கடந்த 20 20 மற்றும் 20 21 ஆம் ஆண்டுகளில் ரூ 25.லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தார். மேலும் உங்களுக்கு மாங்கல்ய தோஷம் உள்ளது. எனவே மாங்கல்ய பூஜை செய்ய வேண்டும் என்று கூறி கருப்பையாவின் மனைவியின் 15 பவுன் தாலி சங்கிலியையும் பிரசன்னா வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இடப் பிரச்சினையை பிரசன்னா தீர்த்து வைக்காமல் மோசடி செய்துவிட்டார். இதற்கு பிரசன்னாவின் மனைவி அஸ்வினி ( வயது 31) ஆர். எஸ்.புரத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் (வயது 28 )பிரகாஷ் ( வயது 58 )ஐயர் உடந்தையாக இருந்ததாக உள்ளனர் .இதுகுறித்து கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் பிரசன்னா அவரது மனைவி அஸ்வினி, ஹரி பிரசாத் பிரகாஷ் ஆகியோர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.