இருகூரில் சூப்பர்வைசர் வீட்டில் 11 பவுன் நகை,பணம் கொள்ளை-மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை இருகூரில் உள்ள ஜி .எம். நகரை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சரவணக்குமார் (வயது 31)ஒரு தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் கடந்த 31ஆம் தேதி சரவணகுமார் வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டார் . நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவபூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகள், பணம் ரூ10 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து சரவணகுமார் சிங்கநல்லூர் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.