சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (26). எலக்ட்ரீசியன்.

இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நட்பாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் அறிந்ததும், இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஓராண்டுக்கு முன்பு மோகன்ராஜ், 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் 17 வயது சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனால் காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு சென்றார்.

அப்போது அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமிக்கு 17 வயது பூர்த்தி ஆவதற்குள் திருமணம் ஆனது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தை நல அலுவலர் சரஸ்வதி காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காரமடை இன்ஸ்பெக்டர் குமார், எலக்ட்ரீசியனான மோகன்ராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார்.பின்னர் மோகன்ராஜை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.