கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள கண்ணம்பாளையம், கல்லான் தோட்டத்தைச் சேர்ந்தவர் சிவசாமி. இவர் இறந்து விட்டார் .இவரது மனைவி தங்கமணி (வயது 65 )இவர் நேற்று காந்திபுரத்தில் இருந்து தனியார் டவுன் பஸ்சில் பீளமேட்டுக்கு பயணம் செய்தார் .பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் பஸ் நின்றபோது அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை காணவில்லை.யாரோ கூட்டம் நெரிசலில் திருடிவிட்டனர். இது குறித்து தங்கமணி பீளமேடு போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் 6 பவுன் தங்கச் செயின் திருட்டு..!








