கோவை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு…

கோவை ஆர் .எஸ். புரம். லாலிரோடு சக்தி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் .இவரது மனைவி ஆனந்தி (வயது 46)டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மேற்கு பெரியசாமி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர் .இது குறித்து ஆனந்தி ஆர். எஸ் .புரம். போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.