கோவை வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு-பீரோவில் இருந்த 3 கை ரேகைகளை வைத்து போலீசார் விசாரணை..!

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள மசக்காளிபாளையம் நீலிஅம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன் ( வயது 47) என்ஜினியர் .இவர் சொந்தமாக டெக்ஸ்டைஸ் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்து வருகிறார் .நேற்று காலை 11-30 மணிக்கு இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று இருந்தார் .மதியம் 2 – 15 மணிக்கு வீட்டுக்கு வந்தார் .அப்போது வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 8.5 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவற்றை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து விவேகானந்தன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.பீரோவில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் 3  கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது.