கடைக்கு சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் தங்க செயின் பறிப்பு-மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு..!

கடைக்கு சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு.

கோவை: கோவை காந்திபுரம் 1 -வது வீதியை ( விரிவாக்கம் )சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி கலைச்செல்வி ( வயது 61) நேற்று இவர் அங்குள்ள கடைக்கு சாமான்கள் வாங்க நடந்து சென்றார் .அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 ஆசாமிகள் கலைச்செல்வி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர் .இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை தேடி வருகிறார்கள்..