கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவரிம் மனு அளித்துள்ளனர் அதில் வால்பாறை தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த ரூபாய் 425. 40 க்கு குறைவாக ஏடிபி, எல்.பி.எப், ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எல்.எல்.எப் ஆகிய 5 தொழிற்சங்கங்கள் ரூபாய் 395 க்கு வால்பாறை தோட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் நிர்வாகத்தினரும் கையொப்பமிட்டுள்ள 5 தொழிற்சங்கங்களுக்கு சிறப்பு சந்தா என்ற பெயரில் தொழிலாளர்களை வற்புறுத்தி ஒப்பந்த படிவத்தில் அனைத்து தோட்ட அந்தந்த எஸ்டேட் மாஸ்டர்களிலும் சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகளின் முன்னிலையில் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி கையொப்பம் பெற்று வருவதாகவும் அதை கண்டித்து ஏற்கனவே நேற்று முன்தினம் வால்பாறை தொழிலாளர் நல உதவி ஆய்வாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் டி.சி.எல், ஏ.சி.எல் ஆகியோரிடமும் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி எம்எல்ஏ தலைமையில் வால்பாறை திராவிடத் தோட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் எஸ். கல்யாணி, ஐஎன்டியுசி பிரபாகரன், , சிஐடியு பரமசிவம் , கொங்குநாடு மக்கள் கட்சி வே.அன்பழகன், பிஎம்எஸ் சாமிதாஸ் மற்றும் வழக்கறிஞர் ஆர்.ஆர் பெருமாள் ஆகியோர்கள் இணைந்து மனு அளித்து தொழிலாளர்களிடம் கட்டாயப்படுத்தி கையொப்பம் பெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்
Leave a Reply