உடுமலை அருகே சுடலை ஆண்டவர் கோவிலில் 2 நாட்கள் நடந்த கொடை விழா ..!

உடுமலை குறிச்சி கோட்டை பக்கம் உள்ள ஆலாம்பாளையம் பிரிவில் அருள்மிகு. சுடலை ஆண்டவர் திருக்கோயில் உள்ளது. இந்த கோவில் கொடை விழா நேற்று முன்தினம் திங்கட்கிழமை தொடங்கியது. நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு அன்னதானமும், 10 மணிக்கு திருமூர்த்தி மலையில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும்,மதியம் 12 மணிக்கு கணியான் மகுடம் பாடுதல், மதியம் 1 மணிக்கு அன்னதானமும் 2 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், மாலை 6 மணிக்கு கணியான் மகுடம் பாடுதல் ,இரவு 9 மணிக்கு கும்பம் ஏற்றுதல், 10மணிக்கு ஓம குண்டம் வளர்த்தல், இரவு 11 மணிக்கு படைப்பு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு கணியான் கைவெட்டி, நாக்கு வெட்டி திரளை உணவு கொடுத்தல், பரிவேட்டைக்கு புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து அருள்வாக்கு – பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.கொடை விழாவை யொட்டி கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை சுடலை ஆண்டவர் கோவில் நிர்வாகி வி.மாரியப்பன் செய்திருந்தார்..