வேலூர் காவல் கண்காணிப்பாளர் வாட்ஸ் அப் புகார் மூலம் வழக்கு பதிவு செய்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள 162 செல்போன்கள் கண்டுபிடிப்பு.!!

வேலூர் மாவட்டம்:: சத்துவாச்சாரியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் எம்.எஸ்.முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் ஆகியோர் கடந்த  மூன்றாம் தேதி வாட்ஸ் ஆப் மூலம் செல் போன் தொலைந்தால் புகார் தெரிவிக்கலாம் என “செல் டிராக்கர்” 94862 14166 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை வெளியிட்டனர். இதன் மூலம் 981 புகார் வரப்பெற்ற நிலையில் அதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 371 புகார்களுக்கு வழக்குபதிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் விசாரணை செய்து 162 செல்போன்களை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் எம். எஸ்.முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் ஆகியோர் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்..