கோவையில் கோவில் தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற 11 ஆம் வகுப்பு மாணவர் பலி

கோவையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது நேர்ந்த விபரீதம் – பெருமாள்பதி கோவில் தடுப்பணையில் மூழ்கி 11ஆம் வகுப்பு மாணவர் பலி

ஆலந்துறை அருகே பெருமாள்பதி கோவில் தடுப்பணையில் மூழ்கி 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆலந்துறை பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று பள்ளிக்குச் செல்லாமல் தனது சக நண்பர்கள் 3 பேருடன் ஆலந்துறை அடுத்த பெருமாள்பதி கோவில் தடுப்பணையில் குளிக்கச் சென்றுள்ளார்.

அப்போது, நீரில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்த நவீன்குமார் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் காப்பாற்ற முடியாததால், மாணவர் முழுவதுமாக நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, நண்பர்கள் அளித்த தகவல் அடிப்படையில் விரைந்து வந்த ஆலந்துறை போலீசார் மற்றும் தொண்டாமுத்தூர் தீயணைப்பு வீரர்கள், நவீன்குமார் உடலை தேடி வந்தனர்.

இந்நிலையில் நீரிழ் மூழ்கிய நவீன்குமார் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.

இதனையடுத்து நவீன்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து நவீன்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடுப்பணையில் குளிக்க சென்ற 11ஆம் வகுப்பு பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.