வால்பாறையில் காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்..!

கோவை மாவட்டம் வால்பாறையில் வருகின்ற 31 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காவல் துணைக் கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன் தலைமையில் காவல் ஆய்வாளர் கற்பகம் முன்னிலையில் இந்து முன்னணியினருடன் ஆலோசக்கூட்டம் வால்பாறை காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுமார் 90 சிலைகள் பிரதிஷ்டை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ள இந்து முன்னணியினரிடம் ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்டு வரும் இடங்களைத் தவிர புதிதாக எந்த இடங்களிலும் பிரதிஷ்டை செய்யக்கூடாது. பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் பாதுகாப்பு அளிக்கப்பட்டாலும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் எந்த ஒரு தகவல் என்றாலும் தாமதிக்காமல் காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் 31 ஆம் தேதி முதல் விசர்சனதினமான 4 ஆம் தேதி வரை அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாதவாறு காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளுடன் கூட்டம் நடந்து முடிந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்து முன்னணியின் கோவை தெற்கு மாவட்ட கோட்டச்செயலாளர் பாலச்சந்தர், கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் ஏ.எஸ்.டி. சேகர், நகரத்தலைவர் சதீஷ், ஒன்றியத்தைவர் சுப்பிரமணி, ஒன்றிய பொதுச்செயலாளர் ரவீந்திரகுமார், நகரப்பொதுச் செயலாளர் ஆனந்த், பாஜகவின் வால்பாறை மண்டல தேர்தல் பார்வையாளர் கே.எம்.தங்கவேல், மண்டலத்தலைவர் எம்.ஆர்.கே.பாலாஜி மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளும், பாஜக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்..