கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 14 ஆம் ஆண்டு கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஆறாவது நாளான நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது . அதைத் தொடர்ந்து நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது . முன்னதாக முருகப்பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை ஆகியோர்கள் சிறப்பு அலங்காரத்தில் வேத மந்திரங்கள் மற்றும் மேள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் அரோகரா நாமம் சொல்லி மனமுருக வேண்டிக் கொண்டனர். செயல் அலுவலர் ஹேமா ஷாலினி முன்னிலையில் கந்த சஷ்டி திருவிழா குழுவினரின் சிறப்பான ஏற்பாட்டு செய்திருந்த இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் கோலாகலம்








