வடகரை திரௌபதி அம்மன் தர்மராஜா ஆலயத்தில் ஆடித் திருவிழா..!

மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் வடகரை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் தர்மராஜா ஆலயத்தில் ஆடித் திருவிழா ஆலய பொறுப்பாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சியில் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பால்குடம் எடுத்தல், கூழ்வார்த்தல், கும்பம் படையல் பூஜை, பதி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இத்திருவிழாவிற்கு சுற்றுவட்டார பக்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு அர்ச்சனைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கினர்..