பாலிவுட் நடிகர்களைக் குறிவைத்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்

மும்​பையில் அமிதாப் பச்சன் உள்​ளிட்ட பாலிவுட் நடிகர்​களைக் கொல்ல திட்​ட​மிட்​டிருந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த இரு​வர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இதையடுத்து, இவர்​களிட​மிருந்து காப்​பாற்​றப்​பட்​ட​தாகக் கூறி, அமிதாப் பச்சன் நன்றி தெரி​வித்​துள்​ளார்.

சர்​வ​தேசக் குற்​றவாளி லாரன்ஸ் பிஷ்​னோய் குஜராத் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுளளார். அவர் சிறை​யி​லிருந்​த​படியே தனது கும்​பலை இயக்​கு​வ​தாகப் புகார்​கள் உள்​ளன. இந்​தக் கும்​பல் பாலிவுட் பிரபலங்​களை​யும் தொழிலதிபர்​களை​யும் மிரட்​டிப் பணம் பறித்து வரு​கிறது. கடந்த அக்​டோபர் 18 அன்று நடிகர் டைகர் ஷெராப் மீது துப்​பாக்​கிச் சூடு நடந்​தது. பிஷ்​னோய் கும்​பலின் இந்த தாக்​குதலி​லிருந்து அவர் தப்​பினார். இந்த வழக்​கில் இது​வரை 7 பேர் கைதாகி​யுள்​ளனர்.

இந்​நிலை​யில், டெல்லி தொழிலதிபர் மற்​றும் அமிதாப் பச்​சனைச் சுட லாரன்ஸ் கும்​பலைச் சேர்ந்த இரு​வர் திட்​ட​மிட்​டிருந்​தனர். பஞ்சாபைச் சேர்ந்த இவர்​கள் டெல்​லி​யிலும் மும்​பையிலும் கைதாகினர்.

விகாஸ் குமார் என்ற விக்கி ஜலந்​தரை​யும், தீபக் சிங் என்ற தீப் பஞ்​சாபின் தர்ன் தாரனையும் சேர்ந்​தவர்​கள். 1984 சீக்​கியர் கல​வரம் குறித்து அமிதாப் கூறிய​தாகச் சொல்​லப்​படும் கருத்​துக்​காக அவரைச் சுடத் திட்​ட​மிட்​ட​தாகக் காவல் துறை வட்டாரங்​கள் தெரி​விக்​கின்​றன.

நவம்​பர் 15-ம் தேதி இரவு​ அமிதாப் எந்த விளக்​கமும் இன்றி ‘காப்பாற்​றப்​பட்​டேன்’ என்று மட்​டும் பதி​விட்​டார். இது இந்​தக் கைதுகளைக் குறிப்​ப​தாகக் கருதப்​படு​கிறது. கடந்த மாதம் அவருக்கு மின்​னஞ்​சலில் 3 மிரட்​டல்​கள் வந்​திருந்​தன.

இதற்கிடையில், அமிதாப்​புக்​கும் அவர் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கோல்டி தில்​லான் என்​பவர் முகநூலில் கொலை மிரட்​டல் விடுத்​துள்​ளார். “குண்டு துளைக்​காத கூண்​டும் அமிதாப்புக்கு உதவாது. இரு​வர் சிக்​கினாலும் எங்​கள் செயல்பாட்டுக்​குத் தடை இருக்​காது” என்று பதி​விட்டுள்​ளார்.