கேமராவிற்கு ஸ்ப்ரே அடித்து துணிச்சலான கொள்ளை முயற்சி” – கோவையில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க நள்ளிரவில் திரில் பிளான்: திட்டம் தோல்வி அடைந்ததால் கொள்ளையன் ஓட்டம்!
ஹிட்ஸாச்சி ஏ.டி.எம் மையத்தில் நடந்த சினிமா பாணி முயற்சி: நெஞ்சை பதறவைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு!
கோவை, கோவில்பாளையம் பகுதியில் இயங்கி வரும் ஏ.டி.எம் மையத்திற்குள் புகுந்த கொள்ளையன் ஒருவன், சி.சி.டி.வி கேமராவின் லென்ஸ் மீது ஸ்ப்ரே அடித்து விட்டு ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முயன்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
கோவை, சர்க்கார் சாமக்குளம் – கோவில்பாளையம் சாலையில் அமைந்து உள்ள ஹிட்ஸாச்சி ஏ.டி.எம் மையத்திற்குள் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவன் நுழைந்து உள்ளான்.தன் அடையாளம் வெளியுலகிற்குத் தெரியக் கூடாது என்பதற்காக, தான் கொண்டு வந்து இருந்த ஸ்ப்ரே பாட்டிலைக் கொண்டு ஏ.டி.எம் மையத்தில் இருந்த கண்காணிப்பு சி.சி.டி.வி கேமராக்கள் மீது சரேலென ஸ்ப்ரே அடித்து கேமராவை மறைத்து உள்ளான்.அதன் பின்னர், ஏ.டி.எம் எந்திரத்தின் பணப் பெட்டகத்தை கூர்மையான ஆயுதங்களால் உடைத்துப் பணத்தைக் கொள்ளை அடிக்கத் தீவிரமாக முயன்று உள்ளான். ஆனால், ஏ.டி.எம் எந்திரத்தின் வலுவான பாதுகாப்பு பூட்டை அவனால் உடைக்க முடியாமல் கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்தது.நீண்ட நேரம் முயன்றும் எந்திரத்தைத் திறக்க முடியாததாலும், யாராவது வந்து விடுவார்களோ என்ற அச்சத்தால் அந்த மர்ம நபர் அங்கு இருந்து தப்பி ஓடி உள்ளான்.
இன்று காலை ஏ.டி.எம் எந்திரம் சேதமடைந்து இருப்பதைப் பார்த்த பொதுமக்கள் கோவில்பாளையம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.கேமராவில் ஸ்ப்ரே அடிப்பதற்கு முன்பாகப் பதிவான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.








