கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பொறுப்பு ஆணையாளர்கள் மட்டுமே பணிசெய்து வந்த நிலையில் தற்போது சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த வெங்கிட லட்சுமணன் வால்பாறை நகராட்சி ஆணையாளராக நேற்று பொறுப்பேற்றார் இந்நிலையில் பொறுப்பேற்ற உடனே நகராட்சி பொறியாளர் ஆறுமுகம்,நிர்வாக அலுவலர் செந்தில்வேல், துப்புரவு அலுவலர் செந்தில் குமார், துப்புரவு ஆய்வாளர் சுரேந்தர் ஆகியோருடன் சென்று திடக்கழிவு மேலாண்மை செயலாக்க மையம், காலை உணவு தயார் செய்யும் உணவு கூடம் உள்ளிட்ட பகுதிகளை அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார் மேலும் தவெக அரசு பொறுப்பேற்று கடந்த மூன்று மாதகாலமாக எந்தவொரு வளர்ச்சி பணிகளும் நடைபெறாத நிலையில் புதிய ஆணையாளர் நியமனத்திற்கு பின்னராவது அனைத்து பணிகளும் நடைபெறுமா என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது
பொறுப்பேற்ற அன்றே ஆய்வு செய்த வால்பாறை நகராட்சி ஆணையாளர்







