தமிழ்நாடு முழுவதும் நேற்று முன் தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கோவில்கள் பொது இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் மட்டும் இந்து முன்னணி பாரத் சேனா ,இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் 727 சிலைகள், புறநகர் பகுதியில் 1,601 சிலைகள் என மொத்தம் 2,232 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர பொதுமக்கள் தங்களது வீடுகளில் சிறிய விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டு வருகிறார்கள். மேலும் வழிபாட்டுத் தலங்களில் லும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளனவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள சிலை கள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது .குறிச்சி குளம், முத்தண்ணன்குளம், சிங்காநல்லூர் குளம், உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது. இதற்காக மேற்க்கண்ட குளங்களில் தடுப்புகள் அமைப்பு விளக்குகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறுநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கோவை சுந்தராபுரம், போத்தனூர், மதுக்கரை, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் இன்று ( புதன்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.இதை யொட்டி கோவை மாநகரில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து மாநகர போலீசார் கூறியதாவது:- கோவை மாநகரில்இன்று மற்றும் வருகிற 18-ம் தேதி ஆகிய 2 நாட்கள் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெறுகிறது.இதையொட்டி மாநகரில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சிலைகள் கரைப்பதற்காக அனுமதிக்கப்பட்ட குளங்களில் தீயணைப்பு துறை வீரர்கள் நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் இருப்பார்கள். அவர்களிடம் பொதுமக்கள் இந்து அமைப்புகள் தாங்கள் கொண்டு வந்த சிலைகளை ஒப்படைக்க வேண்டும் .அவர்கள்தான் சிலைகளை தண்ணீரில் கரைக்கும் பணியை மேற்கொள்வார்கள். சிலைகள் குளத்திற்கு வருவதற்கு இரவு வரை நேரமாகும் என்பதால் குளக்கரைகளில்பிரகாசமான விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஊர்வலம் நடைபெறும் நாட்களில் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குளக்கரைகளில் உள்ள தடுப்பு வேலியை தாண்டி பொதுமக்கள் யாரும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் .இவ்வாறு அவர்கள் கூறினார்கள். ஏற்கனவே வீடுகளில் வைத்து பூஜை செய்த சிலைகளை பொதுமக்கள் நேற்று முத்தண்ணன் குளம் குறிச்சி குளம் உள்ளிட்ட குளங்களுக்கு எடுத்துச் சென்றனர் அங்கு பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள், நீச்சல் பயிற்சி பெற்றவர்கள் சிலைகளை கரைத்தனர்.
கோவையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம்









