தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக குற்றதடுப்புகாவல் நடவடிக்கைகளை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தீவிரப்படுத்தி வருகிறது.
04.09.2026 முதல் 10.09.2026 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் செயல்பாடுகள் பின்வருமாறு…
258 புகார்களுக்கு சம்பவ இடத்திலேயே உடனடி நடவடிக்கை.
14 குற்றவழக்குகள் பதிவு செய்ய உதவி.
4 பெண்கள், 4 குழந்தைகள் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு.
3,484 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
13,581 பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்கள் கண்காணிக்கப்பட்டன.
அறிவுசார் குறைபாடுகளைக் கொண்ட 6 நபர்கள் மீட்கப்பட்டு, 6 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்.
பள்ளிப்படிப்பை இடைநிறுத்திய 71 குழந்தைகள் மீண்டும் கல்வியில் சேர உதவி.
சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் சிங்கப்பெண் சிறப்புப்படையினர் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 14 வயது 9 ஆம் வகுப்பு மாணவன், 20 வயது மற்றும் 30 வயது மதிக்கதக்க நபர்கள் தன்னை ஆற்றங்கரைக்கு அழைத்துச்சென்று பாலியல்வன்கொடுமை செய்ததாகவும், கடந்த 3 மாதங்களாக மிரட்டி துன்புறுத்தி வந்ததாகவும் தெரிவித்தான். SSF உடனடியாக காவல் நிலையத்திற்கும் பெற்றோருக்கும் தகவல் அளித்து புகார் அளித்து வழக்குபதிவு செய்ய உரியநடவடிக்கை மேற்கொண்டனர். ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் POCSO சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படும் சூழ்நிலையில் எவ்விததயக்கமும் இன்றி முன் வந்து, உடனடி உதவிக்காக சிங்கப்பெண் உதவி எண் (1091) என்ற எண்ணை அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உதவி தேவைப்படும் நேரங்களில் தயங்க வேண்டாம் சிங்கப்பெண் உதவி எண் 1091-ஐ அழைக்கவும். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, குற்றத்தடுப்பு, உடனடி தலையீடு, விழிப்புணர்வு நடவடிக்கைகள், மீட்பு, மறுவாழ்வு மற்றும் உரிய சட்ட நடவடிக்கைகள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இத்தகைய தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்குவதில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.








