பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதை

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். தமிழறிஞர் உள்ளிட்ட பலரின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழ் மொழியில் ஆளுமை பெற்றவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, தனது 90-வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். மதுரை​யில் அவரது உடலுக்கு தமிழ் ஆர்​வலர்​கள், அறிஞர்​கள், அரசி​யல் கட்​சி​யினர், பொது​மக்​கள், திரளானோர் அஞ்​சலி செலுத்தி வரு​கின்​றனர். உடல் நலக்​குறை​வால் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று கால​மா​னார். மக்களின் அஞ்சலிக்காக சாலமன் பாப்பையா உடல் ஞானஒளிவுபுரம் பகுதியில் உள்ள அவருடைய வீட்டுடில் அவரது உடல் அஞ்​சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய தொண்டை பெரு​மைப்படுத்தும் வகையில் கடந்த 2000-ம் ஆண்​டு தமிழக அரசின் கலை​மாமணி விருதும், 2021-ம் ஆண்டு மத்​திய அரசின் பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட இருப்பதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் உடல் இன்று காலை 10.30 மணியில் இருந்து 12 மணிக்குள் மதுரை தத்தனேரி மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட உள்ளது.