காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற வீரர்களுடன் மோடி

2026 காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற்றது. இதில் இந்திய அணி மொத்தம் 39 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்தது. 39 பதக்கங்களில் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் அடங்கும். இந்த நிலையில் பிரதமர் மோடி பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை தனது இல்லத்திற்கு அழைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும் வீரர்களின் அனுபவம் குறித்தும் கேட்டறிந்தார் இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, ‘ லோக் கல்யாண் மார்க்கில், 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற நமது தலைசிறந்த வெற்றியாளர்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். போட்டிகளில் அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தோம். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் சிறப்பான செயல்பாடுகளால் நமது தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களின் வெற்றி பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும்.’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.