கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்16ம் தேதி வரை நீட்டிப்பு

கோவை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்த கோர்ட்டுகளை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார். உடனடியாக மாற்றினால் நிர்வாக பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் வருகிற 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டுள்ளன.