தேசிய அளவில் கார் -மோட்டார் சைக்கிள் பந்தயம்

கோவை போத்தனூர் அருகே உள்ள செட்டிபாளையத்தில் உள்ள கரிமோட்டார் ஸ்பீடுவேயில் தேசிய அளவிலான கார் பந்தயம் நடத்தப்படுகிறது. பல்வேறு சுற்றுக்களாக இந்த கார் பந்தயம் நடத்தப்படும் .இதன் படி தேசிய அளவிலான கார் பந்தயம் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் நடக்கிறது . இதில் ஜே.கே. டயர் நோவிஸ்கோப்பை, பார்முலா 4 உள்ளிட்ட பந்தயங்கள் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்காளம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 70-க்கு மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இது தவிர மோட்டார் சைக்கிள் பந்தயமும் நடைபெற உள்ளது.