லண்டனில் பொறியாளராகப் பணியாற்றும் சதீஷ் என்பவரின் தாயாரும், சில மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்ற ஆசிரியையுமான சீனித்தாய் என்பவரிடம், அவரது ஓய்வூதியப் பலன்கள் மற்றும் மாத ஓய்வூதியத்தை வழங்குவதற்காக கள்ளிக்குடி வட்டாரக் கல்வி அலுவலர் ₹40,000 லஞ்சம் பெற்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ், ஊழலைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கும்’ வாட்ஸ்அப் எண் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குத் தன் தாயாருக்கு நேர்ந்த அநீதி குறித்து உடனடியாகப் புகார் மனு அனுப்பியுள்ளார்.
அரசு ஊழியர்களின் இத்தகைய லஞ்ச வேட்கை ஓய்வுபெற்ற முதியவர்களைப் பாதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தவறு செய்த அதிகாரி மீது உரிய துறைரீதியான மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுத்துத் தன் தாயாருக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.








