பிரபல அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் தற்போதைய தமிழக அரசியல் சூழல் மற்றும் கூட்டணி குழப்பங்கள் குறித்து ஊடகங்களுக்கு அதிரடியான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவற்றின் அரசியல் நகர்வுகளை கடுமையாகச் சாடியுள்ளார். குறிப்பாக, அடுத்தடுத்து முக்கிய கட்சிகள் விலகி வருவதால் திமுக ஒரு அரசியல் அனாதையாக மாறி வருவதாக அவர் விமர்சித்துள்ளார்.
தன் பேட்டியில் சவுக்கு சங்கர் கூறுகையில், “திமுக என்பது எப்போதுமே ஒரு அரசியல் அனாதை தான்; வரலாற்றில் எந்த காலத்திலும் வலுவான கூட்டணி இல்லாமல் திமுக தனித்து வென்றதே இல்லை. தற்பொழுது இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் திமுகவை விட்டு வெளியேறி வருவது அவர்களின் பலவீனத்தையே காட்டுகிறது” என்று நெத்தியடியாக குறிப்பிட்டுள்ளார்.மேலும், அதிமுகவின் நிலைப்பாடு குறித்துப் பேசுகையில், “அதிமுக என்ற பிரதான எதிர்க்கட்சி தமிழக அரசியலில் இருந்து முற்றிலும் ஒழிய வேண்டும் என்று ஆளும் தரப்போ அல்லது புதிய முதலமைச்சர் விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகமோ நினைக்கவில்லை. ஆனால், அதிமுகவை ஒழிக்க வேண்டும் என்று அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியே தற்பொழுது தவறான முடிவுகளால் நினைத்து கொண்டிருக்கிறார்” என்று பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த அதிரடிப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.








