திமுக கூட்டணியில் தற்போதைய சூழலில் இடம்பெற இயலாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த இரண்டு நாட்களாகக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட தீவிர ஆலோசனைக்குப் பிறகே கூட்டணியை விட்டு வெளியேறும் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்கு ஆதரவு அளித்தாலும் திமுக கூட்டணியில் தொடர்வதாக CPI முன்பு கூறியிருந்த நிலையில், தற்போது இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
திமுக கூட்டணியில் இருந்து ஏற்கனவே காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் வெளியேறியுள்ள வரிசையில், தற்போது CPI கட்சியும் கூட்டணியை விட்டு வெளியேறியுள்ளது. இந்தத் தொடர் வெளியேற்றங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், வரவிருக்கும் அரசியல் மாற்றங்களுக்கு முக்கியப் புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.






