சோலையார் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் சுமார் 70 ஆண்டுகளுக்கு பின்பு இன்று நடைபெற்றது. கடந்த 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்கள் விக்னேஷ்வர பூஜையுடன் யாக வேள்வி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில் நேற்று விமான கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஸ்ரீ சித்தி விநாயகருக்கு விஷேச திரவிய அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்பு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கி மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது . இவ்விழா ஏற்பாடுகளை சோலையார் 1, 2, 3 டிவிஷன், மற்றும் கல்லார், ஈட்டியார் பொதுமக்கள் இணைந்து நடத்திய நிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் குட்டி என்ற ஆ.சுதாகர்,எஸ்டேட் நிர்வாக மேலாளர்கள், அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..