தமிழகத்தில் நிர்வாக ரீதியான சீர்திருத்தங்கள் மற்றும் பணித் தேவையைக் கருத்தில்கொண்டு, 11 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று இரவு வெளியாகியுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண்மைத் துறையின் புதிய செயலாளராக பி.சங்கர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கைத்தறித் துறையின் முதன்மைச் செயலாளராக டி.என். வெங்கடேஷ் ஐஏஎஸ் பொறுப்பேற்கவுள்ளார். மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக பி.முருகேஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வருவாய் நிர்வாக ஆணையராக காயத்ரி கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவுச் சங்கங்களின் புதிய பதிவாளராக ஜி.லதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மீன்வளத்துறை இயக்குநராக இருந்த முரளிதரன் ஐஏஎஸ், தற்போது வேளாண்துறை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சி.முத்துக்குமரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் கோட்ட துணை ஆட்சியராக நல்லசிவன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொன்னேரி கோட்ட துணை ஆட்சியராக அப்துல் ரசாக் ஐஏஎஸ் புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார்.முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, நிர்வாகத்தை மேலும் சுறுசுறுப்பாக்கும் நோக்கில் இந்த அதிரடி அதிகாரத்துவ மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய அதிகாரிகள் அனைவரும் விரைவில் தங்களது பொறுப்புகளை ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









