வடகோவை ரயில் நிலையத்தில் 3வது நடைமேடை,லிப்ட் அமைக்கும் பணி மும்முரம்

வடகோவை நிலையத்தில் 3-வது நடைமேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது :- கோவை ரயில் நிலைய சந்திப்பில் நிலவும் நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் போத்தனூர் மற்றும் வட கோவை ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வடகோவை ரயில் நிலையத்தில் தற்போது 2 நடைமேடைகள் மட்டும் உள்ளன. இங்கு போதிய அளவு இட வசதி உள்ளதால் 3 – வது நடைமேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்தால் மெ மு ரயில்கள் உள்ளிட்ட ரயில்களை இந்த புதிய நடை மேடையில் நிறுத்த முடியும் .இது தவிர ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைக்கு முதியவர்கள், கர்ப்பிணிகள் செல்ல வசதியாக 3 இடங்களில் லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தின் முகப்பு பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது. மேலும் புதிய நுழைவாயில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் இன்னும் சில மாதங்களில் நிறைவு பெற்றுவிடும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.