பிளஸ் 2 ரிசல்ட் வெளியானது

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 2ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வினை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதியிருந்தனர். விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6 முதல் 20ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் நிறைவடைந்த நிலையில் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in, மற்றும் results.digilocker.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். இணையதளத்தில் முடிவுகளைப் பார்க்க மாணவர்கள் தங்களின் தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்ய வேண்டும்.மேலும், மாணவர்களின் வசதிக்காக அவர்கள் பள்ளியில் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாகவும் மதிப்பெண் விவரங்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும் எனத் தேர்வுத்துறை அறிவித்திருந்தது

இந்த ஆண்டு தேர்வை பொறுத்தவரையில், மொத்தமாக 7.91 லட்சம் மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 4.18 லட்சம் மாணவிகள், 3.72 லட்சம் மாணவர்கள் ஆவார்கள். இந்த ஆண்டும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தமாக மாணவிகள் 97% தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 93.19% தேர்ச்சி அடைந்துள்ளனர்.அரசுமேல்நிலைப்பள்ளிகள் மொத்தமாக 489 முழு தேர்ச்சி பெற்றுள்ளது. மாவட்ட அளவில் அனைத்து பள்ளிகளையும் சேர்த்து ஈரோடு 98.70% தேர்ச்சி பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து, சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி மாவட்டங்கள் அடுத்தடுத்த இடத்தை பெற்றுள்ளன. அரசுப்பள்ளிகளில் ஈரோடு மாவட்டம் முதலிடமும், சிவகங்கை, திருச்சி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் அடுத்தடுத்த இடத்தையும் தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன.