பெண்கள் குறித்து அதிமுகவினர் சர்ச்சை பேச்சு – முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

மிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், பெண்கள் குறித்து சில அரசியல் தலைவர்கள் பேசிய கருத்துகள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சிவி சண்முகம் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேசிய கருத்துகள் பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன.

திமுக அரசை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி. சண்முகம், நடிகை நயன்தாரா குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டதாக அதிமுக ஐ.டி. விங் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது.இதேபோன்று, திண்டுக்கல் சீனிவாசனும் பெண்களை அவதூறாக பேசினார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பெண்கள் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்களை குறிவைத்து இவ்வாறான கருத்துக்கள் பேசப்படுவது அரசியல் பண்பாட்டுக்கு ஒவ்வாதது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் முக ஸ்டாலின் அவர்களும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் (Twitter) பதிவில், “தமிழ்நாட்டுக்கான மேடை எது என்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், “எங்கள் மேடைகளில் தமிழகத்தின் வளர்ச்சி, சாதனைகள் மற்றும் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் குறித்து தரவுகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மறுபுறம் சிலர் பேசுவதற்கு சாதனைகள் இல்லாததால், அவதூறு மற்றும் ஆபாசமான கருத்துகளையே முன்வைக்கின்றனர்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் கவனமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இறுதியில் வளர்ச்சியை தரும் அரசையே மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்” என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து தற்போது அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. இதற்கிடையில், பெண்கள் மரியாதை, அரசியல் பேச்சு நாகரிகம் போன்றவை குறித்து மீண்டும் ஒரு விவாதம் எழுந்துள்ளது. தேர்தல் சூழ்நிலையில் இவ்வாறான கருத்துக்கள் வாக்காளர்களின் மனநிலையை பாதிக்கக்கூடும் என்பதால், தலைவர்கள் பொறுப்புடன் பேச வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.சிவி சண்முகம் கருத்துக்கு நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மிகவும் அமைதியான ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார். “யார் மீது விழுகிறது என்று பார்க்காத மழை போல உங்கள் அன்பும் இருக்கட்டும்” என்ற வரிகள் கொண்ட பதிவை அவர் பகிர்ந்துள்ளார். இதனை ரசிகர்கள் பல்வேறு கோணங்களில் பொருள் கண்டுபிடித்து பேசுகின்றனர். யாராவது தவறாக பேசினாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அன்பாக பதிலளிக்க வேண்டும் என்ற மறைமுக செய்தியாகவே இதை பலர் பார்க்கின்றனர். மொத்தத்தில், இந்த சம்பவம் தமிழக அரசியல் கலாச்சாரத்தில் மாற்றம் தேவை என்பதை சுட்டிக்காட்டுகிறது. பெண்களை மதிக்கும் அரசியல் சூழலை உருவாக்குவது அவசியம் என்ற கருத்து பல தரப்பினராலும் வலியுறுத்தப்படுகிறது.