திருவாருரில் விஜய்க்கு வந்த கூட்டத்தை பார்த்து திமுகவுக்கு பயம் ஏற்பட்டது. எனக்கு மட்டும் சம்மன் அனுப்பப்பட்டதாக செந்தில் பாலாஜி சொல்கிறார். காரணம் அவர் தான் முதல் குற்ற்வாளி என்று பேசினார். அவரது பேச்சு ரஜினிகாந்த் ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் மார்ச் 12, 2026 அன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 17 வயது சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைக்கிறது. அதே போல மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப்பகுதியில் பரிதவித்து காலையில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து காவல் நிலையத்தை அடைந்திருக்கிறார்.
ஒரு வராத்துக்குள் இதுபோன்ற எண்ணற்ற வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதையெல்லாம் முதல்வரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை. குழந்தைகளுக்கு, முதியோர்களுக்கு பாதிப்பில்லை. இளைஞர்களுக்கு பாதுகாப்பு என்பதே தமிழ்நாட்டில் இல்லாத நிலை என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.







