சபரிமலை தங்க மோசடி வழக்கில், தங்கத்தை தானமாக வழங்கிய மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியிடம் வாக்குமூலம் பதிவு செய்த ஊழல் தடுப்பு துறை, நடிகர் மோகன் லாலிடமும் வாக்குமூலம் பெற திட்டமிட்டுள்ளது. கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கொடிமரப் புதுப்பித்தலின்போது தங்கம் மற்றும் பணம் கையாடல் செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இதில் நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி, நடிகர்கள் மோகன்லால், ரெஞ்சி பணிக்கர் உள்பட 27 பேர் கொடிமரத்திற்கு காணிக்கையாக தங்கம் கொடுத்தது தெரியவந்தது. ஆனால் இவர்களிடமிருந்து எவ்வளவு தங்கம் பெறப்பட்டது என்பது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டிடம் எந்த ஆவணங்களும் இல்லை. இதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவுபடி விசாரணையைத் தொடங்கிய ஊழல் தடுப்பு துறை அதிகாரிகள், நன்கொடையாக தங்கம் கொடுத்தவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டனர். அதன்படி, தங்கத்தை தானமாக வழங்கிய மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியிடம் விசாரணை நடத்திய ஊழல் தடுப்பு துறை அதிகாரிகள், வாக்குமூலத்தை பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, நடிகர் மோகன்லால் ஆகியோரிடம் வாக்குமூலம் பெற ஊழல் தடுப்பு துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்..







