கோவை டாட்டாபாத், ராஜேந்திர பிரசாத் ரோட்டை சேர்ந்தவர். சின்னராஜ் .இவர் இறந்துவிட்டார் .இவரது மனைவி சித்ரா (வயது 68) இவர் நேற்று காந்திபுரத்தில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார் .பின்னர் அங்கிருந்து பவர் ஹவுஸ் வருவதற்காக அரசு டவுன் பஸ்சில் ஏறினார் .டாக்டர் ராஜேந்திர பிரசாத் ரோட்டில் இறங்கும்போது அவர் அணிந்திருந்த 6 பவுன் செயினை காணவில்லை. பஸ்சில் வைத்து யாரோ திருடிவிட்டனர். இது குறித்து சித்ரா காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் 6 பவுன் செயின் அபேஸ்..!









