9 ஆம் வகுப்பு மாணவர்களே நீங்க அனைவரும் ஆல் பாஸ்-பள்ளிக்கல்வித்துறை மகிழ்ச்சி செய்தி.!!

தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு இறுதித்தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி,இறுதித்தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக காலதாமதமாக 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில்,தற்போது இந்த சலுகையை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது.அதே சமயம்,தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி இல்லை எனவும்,தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தனித்தேர்வு நடத்த வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.