நார்வே செஸ் போட்டி.. நம்பர் 1 வீரரை தோற்கடித்து விஸ்வநாதன் ஆனந்த் அபார வெற்றி.!!

இந்திய செஸ் நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்து உலக நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை நார்வே செஸ் போட்டியில் அபார வெற்றி பெற்றார். கிளாசிக்கல் பிரிவு 5ம் சுற்றில் அர்மகெடான் செஸ்ஸில் விஸ்வநாதன் ஆனந்த் கார்ல்சனை 50 நகர்த்தல்களில் தோற்கடித்தார் ஆனந்த். இதன் மூலம் முதலிடத்துக்கு முன்னேறினார்.

கிளாசிக்கல் பிரிவுக்கு முன்பு பிளிட்ஸில் நார்வேயின் சூப்பர் ஸ்டார் கார்ல்செனை வீழ்த்திய பிறகு இப்போது ‘சடன் டெத்’ முறையில் ஆடப்படும் அர்மகெடான் சுற்றிலும் கார்ல்சனை தோற்கடித்தார். பிரதான சுற்று ஆட்டம் 40 நகர்வுகளில் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி முடிந்ததால் டை பிரேக் சடன் டெத் அர்மகெடானில் விஸ்வநாதன் ஆனந்த் த்ரில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றி மூலம் 10 புள்ளிகளுடன் விஸ்வநாதன் ஆனந்த் முதலிடம் வகிக்கிறார், இந்த மதிப்பு மிக்க செஸ் தொடரில் இன்னும் 4 சுற்றுக்கள் மீதமுள்ளன.

கிளாசிக்கல் பிரிவில் ஆனந்த் 3 போட்டிகளில் வெற்றியுடன் தொடங்கினார். பிரான்சின் வெசியே லா கிரேவ், பல்கேரியாவின் டோபலோவ், சீனாவின் ஹாவோ வாங் ஆகியோரை வீழ்த்தினார். ஆனால் 4வது சுற்றில் அமெரிக்காவின் வெஸ்லி ஆனந்தின் தொடர் வெற்றிக்கு தடைப் போட்டார்.