85 வயது மூதாட்டியின் 4 ஏக்கர் நிலத்தை அபகரித்து கொலை மிரட்டல்- கிராம நிர்வாக அதிகாரியின் உதவியாளர்..!

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் ஆலத்தூர் கிராமத்தில் உப்புக்கார பள்ளம் என்ற பகுதியில் வசித்து வருபவர் ரங்கம்மாள். இவர் கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பழனி தேவியிடம் புகார் மனு அளித்துள்ளார்.அதில் நான் உப்புக்கார பள்ளத்தில் எனது நான்கு ஏக்கர் சொந்த நிலத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறேன். கூட்டு பட்டாவான எனது நிலத்தை எழுத படிக்க தெரியாத என்னிடம் இருந்து ஆலந்தூர் கிராம நிர்வாக அதிகாரியின் உதவியாளராக பணிபுரியும் கோடீஸ்வரன் எனபவர் ஆலந்துறையை சேர்ந்தவர்களான முத்து நாயக்கர் , தேவிகா, செல்வராஜ், முத்துசாமி, செந்தாமரை, மா நாயக்கர், பெரிய கேட்ட நாயக்கர், பிரியா, கண்ணன் ஆகியோருடன் சேர்ந்து கடந்த 2014 முதல் எனது நிலத்தின் குறிப்பிட்ட பகுதியை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். மேலும் என்னை என் நிலத்தினுள் நுழைந்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டலும் விடுத்து வருகின்றனர்.பத்து வருடங்களுக்கு மேலாக அனைத்து துறைகளிலும் மனு அளித்தும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் இத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .ஆகவே வயதான என் வாழ்வாதாரத்தை பாதுக்காப்பாக கழிக்க தாங்கள் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.