கோவையில் ஒரே நாளில் ஓடும் பஸ்சில் 3 பெண்களிடம் 8 பவுன்தங்க செயின் திருட்டு. கோவை :கோவை சீரநாயக்கன்பாளையம் ,தியாகி குமரன் வீதியைச் சேர்ந்தவர் வசந்தா ( வயது 59 )இவர் மரக்கடையில் உள்ள ஒரு பிரின்டிங் பிரசில் வேலை செய்து வருகிறார் .நேற்று இவர் பி.என்.புதூரில் இருந்து பூ மார்க்கெட்டுக்கு அரசு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.பூ மார்க்கெட் பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை காணவில்லை .யாரோ பஸ்சினுள் திருடிவிட்டனர் .இது குறித்து வசந்தா ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்துள்ளார்.
இதேபோல பேரூர் தமிழ் நகரைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் .இவரது மனைவி தனலட்சுமி ( வயது 57 )இவர் நேற்று பூ மார்க்கெட்டில் இருந்து டவுன்ஹாலுக்கு தனியார் டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். பஸ்சில் வைத்து இவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை யாரோ திருடி விட்டனர்.இது குறித்து தனலட்சுமி ஆர். எஸ் .புரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மனைவி ஆனந்த குமாரி(வயது 56)இவர் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக நேற்று வந்திருந்தார். பின்னர் காந்திபுரத்தில் இருந்து ஒண்டிப்புதூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக அரசு டவுன் பஸ் ஏறினார் .பஸ்சில் வைத்து யாரோ இவரது 3 பவுன்தாலிச் செயினை திருடிவிட்டனர் .இது குறித்த ஆனந்த குமாரி பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.நேற்று ஒரே நாளில் ஓடும் பஸ்சில் 3 பெண்களிடம்தங்க செயின் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply