நள்ளிரவில் டாஸ்மாக் கடை அருகே மதுபானம் விற்ற 8 பேர் கைது..!

கோவையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து காலையிலும், நள்ளிரவிலும் விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நகரில்பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நேற்று திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஆர் எஸ் புரம், பூ மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில் களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பார் ஊழியர் மகேந்திரன் (வயது 39) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 13 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது .இதே போல காந்தி பார்க்கில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது விற்றதாக ரமேஷ் கிருஷ்ணன் (வயது 60) மணிகண்டன் (வயது 34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 15 மது பாட்டில்களும் ,மது விற்ற பணம் ரூ 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் போலீஸ் கந்தசாமி வீதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக மது விற்றதாக தேவகோட்டை சேர்ந்த செல்வம் ( வயது 47) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 12 மது பாட்டில்களும் 990 ரூபாயும் பறிமுதல்செய்யப்பட்டது.. இதேபோல செல்வபுரம் பகுதியில் மது விற்றதாக ராஜேந்திரன் ( வயது 49) திவாகாரன் (வயது 49) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 30 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது .சுந்தராபுரம் பகுதியில் திறந்த வெளியில் சட்ட விரோதமாக மது விற்றதாக திண்டுக்கல் வேடசந்தூரைச் சேர்ந்த வைரப்பன் (வயது 43) கைது செய்யப்பட்டார் இவரிடம் இருந்து 13 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.சரவணம்பட்டியில் உள்ள ராமகிருஷ்ண புரத்தில் டாஸ்மாக் கடைஅருகே மது விற்றதாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி (வயது 38)கைதானார். 10 மதுபாட்டில்பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல சிவானந்தபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மதுவிற்றதாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செபஸ்தி கண்ணு ( வயது 40) கைது செய்யப்பட்டார். 10 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.