குடிபோதையில் இருந்தவரிடம் 3 பவுன் செயின், செல்போன் திருட்டு..!

கோவை ராமநாதபுரம் சுங்கம் அருகே உள்ள தியாகி சிவராம் நகரை சேர்ந்தவர் அசோக். இவரது மகன் சூர்யா
( வயது 24) தூய்மைப் பணியாளர் .இவர் நேற்று குடிபோதையில் அவரது வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த 3 பேர் இவரை வீட்டில் கொண்டு விடுவதாக ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர். பின்னர் அவரை வீட்டின் முன் இறக்கி விட்டு சென்று விட்டனர். வீட்டில் போய் பார்த்த போது அவர் அணிந்திருந்த 3 பவுன் செயின் 1செல்போன் ஆகியவற்றை காணவில்லை. ஆட்டோவில் ஏற்றி வந்த 3 பேரும் தான் இதை திருடியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து சூர்யா ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற அன்பு ,விக்ரம், வசந்த் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்