கோவையில் காரில் கடத்திய 682 கிலோ குட்கா பறிமுதல் – வியாபாரி உட்பட 3 பேர் கைது..!

கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் போலீசார் நேற்று சங்கனூர் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள் .அப்போது அங்கு வந்த ஒரு மாருதி காரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். .அதில் தடைசெய்யப்பட்ட 682 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரும், குட்காவும், ரூ.63,300 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.இதை கடத்தி வந்த கோவை ரங்கேகவுடர் வீதியை சேர்ந்த பொன்ராஜ் (வயது 38),தூத்துக்குடி மாவட்டம் சுண்டன்கோட்டையை சேர்ந்த மதியழகன் (வயது 43) கருமத்தம்பட்டி முப்பிரிபாளையத்தை சேர்ந்த கவுரி சங்கர் ( வயது 24 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பொன்ராஜ் சோப் ஆயில் வியாபாரம் செய்து வருகிறார். மதியழகன் மளிகை கடை வைத்துள்ளார் கவுரி சங்கர் பவர்லூம் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.