சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது – 35 கத்தி பறிமுதல்..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வஞ்சியாபுரம் பிரிவு ஜெ.ஜெ.நகரில் உள்ள ஒரு தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாட்டம் நடத்தியதாக அதே பகுதியைச் சேர்ந்த கதிர் சர்வேஷ் ( 25 ) நந்தகுமார் (27) சேதுராமன் ( 28 ) முகமத் சலீம் ( 46 ) சிவசெல்வம்( 26 )ராமசாமி ( 42) ராமகிருஷ்ணன் ( 26 ) சூர்யா (18 )பாலச்சந்திரன் ( 20 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 15 சேவல்கள் 35 கத்தி , ரூ.12,900 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.