கோவை செல்வபுரம் ,சேரன் நகரை சேர்ந்தவர் சுலைமான், அவரது மனைவி மும்தாஜ் ( வயது 65) இவரது சொந்த ஊர் கேரளா .இவர் நீலாம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தார் .சிகிச்சை முடித்துவிட்டு போத்தனூருக்கு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார் . ஆத்துபாலம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது இவர் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை காணவில்லை. யாரோ கூட்ட நெரிசலில் பஸ்சில் வைத்து திருடிவிட்டனர். இது குறித்து மும்தாஜ் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து,விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply