வாடகைக்கு வீடு எடுத்து அழகிகளை வைத்து விபச்சாரம் : 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது..!

கோவை சரவணம்பட்டி, தபால் நிலையம் அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்,சப் இன்ஸ்பெக்டர்அருண்குமார் ஆகியோர் நேற்றிரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த மதுரை உசிலம்பட்டி பேரையூரை சேர்ந்த மாரியம்மாள் (வயது 35 )தாராபுரம், காமராஜபுரத்தைச் சேர்ந்த வாசுகி ( வயது 25) கல்பனா ( வயது 24) கேரள மாநிலம், கொடுவாயூர் திலீப் குமார் ( வயது 42) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.