கோவை சிறைவாசிகளுக்கு பல் மருத்துவ முகாம்..!

கோவை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு பல் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இது தொடர்பாக கோவை மத்திய சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காவல் துறை இயக்குநர் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறைத் தலைவர் அம்ரேஷ் பூஜாரி அறிவுரையின்படியும், கோவை சரக சிறைத் துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம் வழிகாட்டுதல்படியும் கோவை மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமை வகித்தார்.