தமிழ்நாட்டில் வருமான வரி 52.3% அதிகரிப்பு..!

டுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலமாக மாறும் என நிதியமைச்சர் நம்பிக்கை.

2022 ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் தமிழ்நாட்டின் வருமான வரி வருவாய் 52.3% அதிகரித்துள்ளது. 2021 இதே காலாண்டில் ரூ.22,260 கோடியாக இருந்த வருமான வரி வருவாய் இந்தாண்டு ரூ.33,923 கோடியாக அதிகரித்துள்ளது. கலால் வரி மூலமாக ரூ.2,594.55 கோடியும், பத்திரங்கள் மற்றும் பதிவுத்துறை மூலம் ரூ.4,457.95 கோடியும் வருமானம் வந்துள்ளது. தமிழ்நாட்டில் வருமான வரி விகிதம் அதிகரித்துள்ளதால் முதல் காலாண்டில் மாநில அரசு குறைவாக கடன் வாங்கியுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலமாக மாறும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.